Falling Teddy .. Good night Baby Teddy
Contents
-
▼
2009
(15)
-
▼
July
(15)
- A Great Villan is DEAD!
- If you want your dreams to come true, don't oversl...
- Performance & Position!
- Excuse Me Kanthaswamy
- Kandasamy Song Lyrics
- FoR FuN
- Facts about Guyz
- A fruitcake
- CHOCOLATE CHIP COOKIES RECIPE
- Beautiful Hearts
- How to Express Your Feelings to the One You Love!
- செல்போனுக்குன்னு ஒரு மனசு இருந்தால் .....
- Making Love To A Friend
- காதல் கவிதைகள்.....
- என்னை சடலம் போன்று மாற்றுங்கள் என மைக்கேல் ஜக்ஸன் ...
-
▼
July
(15)
Tuesday, July 14, 2009
காதல் கவிதைகள்.....
நான் பார்த்தது தவறில்லை
நான் பார்த்தது தவறில்லை, பார்வை மாறியது தான் தவறோ!
எனக்கு நீயின்றி வேறில்லை, நீ தான் வேறோ……!
உன் சம்மதமின்றி காதல் இல்லை, உன் சம்மதம் தான் கானல் நீரோ!
நேற்று, இன்று, நாளை…..
நேற்று, நீ தூரத்து வின்மீனாய்
என் கண்ணை பறித்தாய்…..
இன்று, நீ அருகிலிருக்கும் சந்திரனாய்
குளிர்ச்சி தருகிறாய்…….
நாளை, நீ என்னை ஆளும் சூரியனாவாயோ!
என் ‘பஞ்சமி’ நீ….
என் மனதை எப்போதுமே வருடிச் செல்லும் நீர் அலை நீ…..
என் மனதில் சுடர்விட்டெரியும் காதல் நெருப்பு நீ….
உன் மனமென்னும் நிலத்தில் அன்பை மட்டும் அறுவடை செய்பவள் நீ….
நான் செல்லும் இடமெல்லாம் என்னுடன் வரும் முடிவில்லாத வானம் நீ….
எனனை எப்போதுமே தாலாட்டிச் செல்லும் தென்றல் நீ…..
என் வாழ்வில் பஞ்ச பூதங்களாய் நிறைந்த என் ‘பஞ்சமி’ நீ….
யோசிக்கிறாய்….
உன் அருகில் அமர்ந்து உன் சுவாசத்தை சுவாசிக்க நினைத்தேன்…..
ஆனால் நீ என் அருகிலிருந்தும் என்னை நேசிக்க யோசிக்கிறாய்…..
என் தேவதைக்கான கவிதை பக்கங்கள்…..
உன்னை பற்றி எழுதிட எனக்கு பக்கங்கள் போதவில்லை!
ஆனால், இத்துடன் முடித்து கொள்ள எனக்கு மனமுமில்லை!
உன்னை பற்றி எழுதுவதற்கு எல்லையே இல்லை…
ஆனால், இவற்றை எழுதிய எனக்கு தொல்லையே இல்லை….
என் தேவதைக்கான கவிதை பக்கங்கள்…..
என் மனச்சுரங்கத்தில் வெட்டியெடுத்த கட்டி தங்கங்கள்…
என்னவள் மனதை அலங்கரிக்கும் அழகு ஆபரணங்கள்…
தேவையில்லை, எனக்கு வார்த்தை ஜாலங்கள்,
என் உளறல்களையும் புரிந்து கொள்வாள் என்னவள்….
உனது கோழை நண்பன் ஆனேன் நான்!
உன் அருகாமையில், உன் காதலனாக உன்னில் தொலைந்து போக நினைத்தாலும்,
நீ என் நல்ல தோழியாக, என்னை என்னிடமே திருப்பிச் சேர்க்கிறாய்…
எந்த பெண்ணையும் காதலிக்காதே என்று சொல்கிறாய்,
நீ என்றுமே என் இனிய நண்பன் என்று சொல்கிறாய்…
இந்த இரண்டும் எப்படிச் சாத்தியம்? அது உனக்கே வெளிச்சம்…
நீ என் கைக்கோர்க்கும் போது என் மனதில் துளிர்க்கும்
உணர்வுக்கு பெயர் தெரியாமல் தான் தவிக்கிறேன்…
என் மனதிலும் நட்பைத் தவிர வேறேதுமில்லை என்று ஆணித்தரமாக
உன்னிடம் சொல்ல முடியாத உனது கோழை நண்பன் ஆனேன் நான்!
யாதுமாகி நின்ற அவள்….
என் எண்ணங்களில் எல்லாம்
வண்ணம் கொண்டு நிறைபவள்..
கற்பனைகளில் காலம் கடத்தி வந்தவனை,
நிஜத்தில் மூழ்கடித்தவள்…
நான் எதிர்பார்த்திருந்த தருணங்களை,
எனக்கு தருவித்தவள்…
நான் செய்கிற குறும்புகளையெல்லாம்,
ரசிக்கின்ற ரசிகையானவள்….
நான் சோகக்கடலில் நீந்திய போதெல்லாம்,
நேசக்கரம் நீட்டியவள்…
நான் என் மனதைத் தொலைத்த நின்ற போது,
நான் அறியேன் என்று சொன்ன பொய்யானவள்…
‘Yes’ சொல்வாள் என் நினைத்து,
நான் ‘ I Love You’ சொன்ன போது
‘S’ ஆனவள்….
நட்பு என்று எப்படி சொல்கிறாய்……
உனக்காக தான் பூக்கள் பறித்து வர செல்கிறேன்,
இதை பிரிவு என்று எப்படி சொல்கிறாய்………..
உன்னிடம் பேச தான் சொற்கள் தேடி கொண்டிருக்கிறேன்,
இதை மௌனம் என்று எப்படி சொல்கிறாய்………….
உன்னை என் மனதோடு தானே ஒட்டி வைத்து இருக்கிறேன்,
இதை வெறும் நட்பு என்று எப்படி சொல்கிறாய்…………….
காதல் கவிதை
உன்னை பார்த்தவுடன் தோன்றுவது,
கவிதை……
நீ பிரியும் போது தோன்றுவது,
காதல்…….
நீ வைத்திருக்கிறாய் என்னை நண்பனாய் மிகச் சாதாரனமாய்…..
உன்னுடன் நடக்கும் போது I Love You
என்று எங்கேயும் பார்த்தால்
தயக்கமாய் தாவும் என் கண்கள்….
Meet my friend
என்று பிறரிடம் என்னை அறிமுகம்
செய்யும் போது ஏனோ மனதுக்குள்
Objection! your honour….
Good Morning Friend என்று விரல்கள் தட்டி
SMS செய்தாலும் உள்ளே என் மனம்
இல்லையென்று தலையை ஆட்டும்….
I love you mummy என்று நீ
செல்லிடபேசியில் பேசும்போது
என் செவியும் அந்த சொற்களுக்கு ஏக்கம் கொள்ளும்…
நாங்கள் என்று நீ சொல்லும்போதெல்லாம் அந்த
சொல்லுக்குள் என்னை எப்போது சேர்த்துக் கொள்வாய்
என்ற கேள்வி எப்போதும் என் மனதில்….
இப்படி எனக்குள் எல்லாமே அசாதாரனமாய் ஓடிக்
கொண்டிருக்க,
நீ மட்டும் வைத்திருக்கிறாய் என்னை நண்பனாய்
மிகச் சாதாரனமாய்…..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment